கேரளா, தமிழ்நாடு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு – கொரோனா அச்சம் எதிரொலி!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக கோவை எல்லைப் பகுதியில் தமிழக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பு பணிகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதனால் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
காய்கறிகள் வாங்குவதற்கு முன் ‘இத’ கவனிங்க – FSSAI வெளியிட்ட முக்கிய வீடியோ!
கேரளாவில் ஓணம் மற்றும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரள, கோவை எல்லைப் பகுதியில் தமிழக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை வாளையாறு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கேரளாவில் இருந்து கோவை வரும் அனைவரும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதேபோல் இ-பதிவும் கட்டாயம். கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கிருந்து தமிழகத்திற்கு பரவி விடக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.