தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் – முதல்வர் ஆலோசனை!

0
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் - முதல்வர் ஆலோசனை!
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் - முதல்வர் ஆலோசனை!
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் – முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அனைத்து துறை அமைச்சர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த நாட்களில் அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வந்தது. அப்போது ஒவ்வொரு துறையின் அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்த பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளையும் வெளியிட்டனர். மேலும் 110வது விதியின் கீழ் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதேபோல் தேர்தலுக்கு முன்னர் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைந்து செயல்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

6000 பேருக்கு வேலைவாய்ப்பு, புதிதாக 100 விற்பனையகங்கள் – Xiaomi அறிவிப்பு!

தற்போது அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவ்டிக்கைகளை எடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். ஏனெனில் கடந்த அதிமுக ஆட்சியில் இதேபோல், 110வது விதியின் கீழ் அறிவித்திருந்த பல அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதேபோல் திமுக ஆட்சி காலத்தில் நடைபெறுவதை முதல்வர் முக ஸ்டாலின் விரும்பவில்லை. இதற்காக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகளை தொடங்குகிறார். இந்த பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்களை நியமிக்க உள்ளார்.

நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் தானே நேரடியாக கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வருங்கால திட்டங்களில் முதல்வர் முழுவதுமாக ஈடுபட உள்ளதால் கட்சி பணிகள் மற்றும் புகார்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் கவனிக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து துறை அமைச்சர்களுடன் நாளை முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here