தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் – தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி!

0
தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் - தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி!
தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் - தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி!
தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் – தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 31 வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தக்காளி காய்ச்சல் பரவல் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் (10.07.2022) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 31 வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்; கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கொரோனா தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றியமையாததாக உள்ளது. மேலும் கேரளா மாநிலத்தின் சில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கஞ்சா ஆபரேஷன் 1, 2 என்ற நடவடிக்கையால் 3,644 பேர் கைது செய்யப்பட்டதுடன் விற்பனையாளர்களின் பலரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சமையல் அம்மா தான் தன்னுடைய அம்மாவா என குழப்பத்தில் இருக்கும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக அனைத்து இடங்களிலும் தொடர் சோதனை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுவது சரியல்ல. நடவடிக்கை என்பது முதலில் ஆதாரங்கள் திரட்டுவது, அதற்கான ஆவணங்களை சரிப்படுத்துவதாகும். பின்னர் வழக்கு தொடுப்பது என படிப்படியாக தொடரும். மேலும் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் ஊர்ஜிதமாக இருக்க வேண்டும். வழக்கு தொடரப்படும் போது அதில் முழுமையான வெற்றி அரசுக்கு கிடைக்க வேண்டும். எனவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!