வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு – Chats மற்றும் Status இரண்டும் ஒருங்கிணைப்பு!

0
வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு - Chats மற்றும் Status இரண்டும் ஒருங்கிணைப்பு!
வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு - Chats மற்றும் Status இரண்டும் ஒருங்கிணைப்பு!
வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு – Chats மற்றும் Status இரண்டும் ஒருங்கிணைப்பு!

வாட்ஸ் அப்பில் தற்போது புதிய அம்சமாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ்அப் அப்டேட்:

வாட்ஸ்அப் செயலி அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி ஒரு நம்பிக்கையான தகவல் தொடர்பு வலைத்தளமாக உள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீபத்தில் தனது தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த புதிய அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பிறகு வாட்ஸ் அப் நிறுவனம், அதன் பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வந்தது. அதன்படி UPI பேமெண்ட் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மேலும் ஆடியோ செய்திகளை விரைவுபடுத்தும் ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் அடுத்த புதிய அம்சமாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. “Chats” என்ற பிரிவிலேயே நேரடியாக ஸ்டேட்டஸ் அப்டேட்களைக் காண்பிக்கும் புது வசதியை வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தொடர்புகளின் “Status” விரைவாக பார்க்க முடியும்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் – வாரியம் உத்தரவு!

அதாவது தற்போது மெட்டாவின் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்கள் எப்படிப் பார்க்கிறோமோ அதேபோல் வாட்ஸ் அப்பிலும் பார்க்கும் வசதி அறிமுகமாக உள்ளது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த புது அப்டேட் எப்போது பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் இதுவரை வரவில்லை. கூடுதலாக வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் குழு வாக்கெடுப்புகளை (Group Polls) உருவாக்க பயனர்களை அனுமதிக்கும் வசதியின் சோதனை முயற்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!