சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தவறாமல் படிங்க – காப்பீட்டு திட்டம்!

0
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தவறாமல் படிங்க - காப்பீட்டு திட்டம்!
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தவறாமல் படிங்க - காப்பீட்டு திட்டம்!
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தவறாமல் படிங்க – காப்பீட்டு திட்டம்!

வெள்ளப்பெருக்கு, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பல வீடுகள் கடுமையாக சேதாரமாகுவது உண்டு. இந்த அவசரகால தேவைகளுக்காக, வீடுகளுக்கான காப்பீட்டு திட்டங்கள் அதாவது பாரத் க்ரிஹ ரக்‌ஷாக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காப்பீட்டு திட்டம்

பொதுவாக வாகங்களுக்கு சேதாரம் ஆனால் அதற்கு இன்சூரன்ஸ் உண்டு. ஒருவருக்கு சாலை விபத்து ஏற்பட்டால் அதற்கும் காப்பீடுகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் பேரிடர் போன்ற இக்கட்டான காலங்களில் வீடுகள் அதிகமாக சேதப்படும் காரணத்தால், சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கும் காப்பீடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வீடுகளுக்கான புதிய காப்பீட்டு திட்டமாக பாரத் க்ரிஹ ரக்‌ஷாக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு நீக்கம் – மாநில செயற்குழு அறிவிப்பு!!

இத்திட்டத்தின் கீழ் சேதமடைந்த உங்கள் வீடுகளை சீர்படுத்திக்கொள்ள முடியும். இந்த காப்பீட்டு திட்டங்கள் குறித்த புதிய வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்ட பிறகு, இத்திட்டத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பாலிசிக்கான காலம் 10 ஆண்டுகள் ஆகும். மேலும் அந்த வீடு 40 ஆண்டுகளுக்கு முன்னாக கட்டப்பட்டதாக இருக்க கூடாது.

வீடுகளுக்கு கொடுக்கப்படும் 20% காப்பீட்டு தொகையில் general contents என்பதற்கு கீழ் வீட்டில் உள்ள கராஜ்கள், அவுட்கவுஸ், சுவர், வேலி, கதவு, உள் சாலை, வாகன நிறுத்தும் இடம், தண்ணீர் டேங்குகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அடங்கும். மேலும் இது 10 லட்சம் வரை உச்சவரம்பு உடையது. இது தவிர வீட்டு திட்டத்தின் பயனர்களுக்கு விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. அதாவது ஏதாவதொரு விபத்தில் இத்திட்டத்தின் பாலிசிதாரர் அல்லது அவரது மனைவி இறந்தால், ரூ .5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்த இழப்பீடு தொகைக்காக விண்ணப்பிக்க, சம்பந்தப்பட்ட பாலிசி நிறுவனத்திற்கு பாலிசி எண்ணுடன் கூடிய தகவல்களை வழங்க வேண்டும். வீட்டில் சேதாரம் ஏற்பட்ட 30 நாட்களுக்குள்ளாக, அந்த தகவல்களை இன்ஸூரன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். மேலும் இழப்பீடு பற்றிய ஒரு சுருக்கமான விவரங்களை அறிக்கையாக எழுதி, காவல்துறை அல்லது அது போன்ற அதிகாரத்திற்கு கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை விவரங்கள், வீட்டுக் கட்டிடம் அல்லது வீட்டு சாமான்கள் தொடர்பான காப்பீட்டின் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!