கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு காப்பீட்டு வசதி – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதிலும் இரண்டாம் அலை நோய்த் தொற்று தாக்கத்தால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்து பாராளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
கல்வி உதவிகள்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்று தீவிரம் எடுத்து பரவி வருகிறது. இந்த வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலைக்கு ஆளாகினர். குறிப்பாக முதியவர்கள் அதிகம் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். இதில் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வந்தனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் முன்னதாக திணறி வந்தது. உலக சுகாதார துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க முதலில் நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் மக்கள் தேவையற்ற காரணங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறுவது முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இத்தகைய தடுப்பு பணிகளுக்கு மத்தியில் இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவத் தொடங்கியது. இந்த உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் எதிர்பாராத அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தியது. முதல் அலையின் போது அதிகமாக முதியவர்கள் தான் பாதிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் அலையில் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் குழந்தைகள் அதிகம் தொற்று பாதிப்பிற்கு ஆளாகினர். இதனால் ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பாக பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
அதற்கு பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் 23 வயதை எட்டும் வரை கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் 18 வயதை அடையும் போது தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி பதிலளித்துள்ளார். மேலும் உறவினர்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாத்ஸல்ய திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.4,000 உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் சேர வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் ஜன் ஆரோக்கியா காப்பீடு திட்டத்தின் கீழ் 23 வயது வரை சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது.