தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் தேவையா?

0
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பூஸ்டர் தேவையா?
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பூஸ்டர் தேவையா?
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் தேவையா?

தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க பூஸ்டர் டோஸ் தேவையில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினாலே 97.5% நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் மூன்றரை கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு விஞ்ஞானி அறிவித்துள்ளார். அதனால் பூஸ்டர் டோஸ் குறித்து எதுவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

செப்.9ல் நீட் UG 2021 அட்மிட் கார்டு வெளியீடு? 12ல் தேர்வு!

இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து ஒன்றிய அரசு எதுவும் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்தும் தெரிவிக்கவில்லை. அதே போல தான் தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசிடம் இருந்து தடையில்லாமல், தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 19,22,080 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் எல்லையோர மாவட்டங்களில் தடுப்பூசி முழுமையான அளவில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் செப்டம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் விடுமுறை – சபாநாயகர் அறிவிப்பு!

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 6,20,255 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசி போடப்பட உள்ளது. கேரள மாநில எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் வரும் 12 ஆம் தேதி முதல் 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 2 தடுப்பூசி போட்டுக்கொண்டாலே 97.5% நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும், விரைவில் குணமடைந்து விடுகிறார்கள். மூன்றாவது டோஸ் உலகில் எங்கும் போடப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும் மூன்றாவது டோஸ் போட வேண்டும் என தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!