ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் அட்ரஸ் திருத்தம் செய்யும் வழிமுறைகள் – UIDAI அறிவிப்பு!

0
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் அட்ரஸ் திருத்தம் செய்யும் வழிமுறைகள் - UIDAI அறிவிப்பு!
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் அட்ரஸ் திருத்தம் செய்யும் வழிமுறைகள் - UIDAI அறிவிப்பு!
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் அட்ரஸ் திருத்தம் செய்யும் வழிமுறைகள் – UIDAI அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வது குறித்து முக்கிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு திருத்தம்

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டை அனைத்து தேவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாக அரசு அறிவித்திருந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேலும், ஆதார் அனைத்து மின்னணு சேவைகளிலும் முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க முக்கிய படிவம் – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு!

மேலும் ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஆதாரில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்ய இ-சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் ஆதார் சம்பந்தப்பட்ட அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது ஆன்லைன் மூலம் ஆதாரில் அட்ரஸ் மாற்றுவது குறித்து சில வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,

1. ‘Aadhaar Card Verifier’ மூலம் முகவரியைப் புதுப்பிக்க, முதலில் அட்ரஸ் வேலிடேஷன் லெட்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை விண்ணப்பிக்க UIDAI இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, யுஐடிஏஐ (UIDAI) இணையதளத்துக்கு சென்று, ஆதார் அப்டேட் பிரிவிலிருந்து ‘Request Aadhaar Validation Letter’ என்பதற்கு சென்று சரிபார்ப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2. அதன் பிறகு, உங்கள் டிஸ்பிளேவில் செல்ப் சர்வீஸ் அப்டேட் போர்ட் என்ற விருப்பம் காண்பிக்கப்படும். இதை உங்களது ஆதார் அட்டை எண் விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும்.

Exams Daily Mobile App Download

3. இதற்குப் பிறகு, உங்கள் ‘Aadhaar Card Verifier’ இல் காட்டப்பட்ட ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் கார்டு வெரிபையர் மூலம் உங்கள் தகவல் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.

4. பிறகு SMS ல் உள்ள லிங்க் ஐ கிளிக் OTP அனுப்பப்படும். இந்த OTP மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Verify பட்டனை கிளிக் செய்ய வேண்டும். சரிபார்ப்பு முடிந்ததும் சர்வீஸ் ரெக்வஸ்ட் நம்பர் SMS மூலம் அனுப்பப்படும்.

5. இதற்குப் பிறகு, நீங்கள் SRN மூலம் உள்நுழைந்து, உங்கள் புதிய முகவரியை வெரிபை செய்ய வேண்டும். இதையடுத்து ஆதார் அட்டை சரிபார்ப்பவருக்கு ‘Address Validation Letter’ மற்றும் ‘Secret Code’ அனுப்பப்படும். பிறகு ஆதார் அப்டேட் பகுதிக்கு சென்று Secret Code வழியாக Update Address செல்ல வேண்டும்.

6. இங்கே உங்களது Secret Code விவரங்களை உள்ளிட்டவுடன் உங்கள் புதிய முகவரி ஆதார் அட்டையில் அப்டேட் செய்யப்படும். மேலும் இந்த முறையை பயன்படுத்தி ஒரே ஒரு தடவை மட்டுமே உங்கள் ஆதாரை புதுப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!