“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த அருண் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவியில் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் அருண் ஷூட்டிங் இடைவெளியில், டெல்லி சென்று அங்கே பல புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியல் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் நல்ல புகழில் இருக்கின்றனர். பாரதி மற்றும் கண்ணம்மா வாழ்க்கையில் சந்தேகத்தால் ஏற்படும் விரிசல் பற்றியும் அதில் இருந்து இருவரும் எப்படி சேர போகிறார்கள் என்பது பற்றியும் கதை இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் நடித்து வருகிறார். தனது சொந்த பெயரை மறந்து பாரதி என மக்கள் மத்தியில் பேசப்படும் அளவிற்கு பிரபலமாக இருக்கிறார்.

கோபிக்காக காத்திருக்கும் மயூரா, குடும்பத்தை விட்டு வருவாரா கோபி? இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதல்ல ரோஷினி நடித்து வருகிறார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். சீரியல் கதாநாயகி மாற்றம் என்பது மிகப்பெரிய விஷயம், மக்கள் மத்தியில் சீரியல் பற்றிய கருத்தை மாற்றாமல் இருக்க இயக்குனர் பல திருப்பங்களை கொண்டு வந்து விறுவிறுப்பை கூட்டி வருகிறார். அனைவரும் எதிர்பார்த்தது போல பாரதி கண்ணம்மா விரைவில் சேர போகிறார்கள்.

கண்ணனை புரிந்து கொண்ட மூர்த்தி, இட்லி கடை தொடங்கிய ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இப்படி பரபரப்பாக கதை சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாரதி படபிடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார். அவர் தற்போது டெல்லி சென்று இருக்கிறார். அங்கே ரிலாக்ஸ் செய்து பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருக்கிறார். தொடர்ந்து பட பிடிப்பு என இருந்த அவர் சாதாரண மனிதராக இருப்பது நிம்மதியாக இருக்கிறது என தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!