மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!

மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இதனுடன் பிட்மென்ட் காரணி உயர்வால் அவர்களின் சம்பளமும் உயர வாய்ப்புள்ளது.

DA உயர்வு

அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம், மற்ற வங்கிகளின் வட்டி விகிதங்கள், நிலையான வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் அனைத்தும் சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கலாம் என்று தெரிகிறது. இப்போது நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு ஊழியர்களுக்கு ஜூலை தவணைக்கான அகவிலைப்படி உறுதியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் DA தொகை உயர்த்தப்படும். அந்த வகையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான DA ஜூலை 2021ல் 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபரில் டிஏ தொகை மூன்று மடங்காக அதிகரித்தது. மேலும் மார்ச் 2022 முதல், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 34 சதவீதம் என்ற விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இப்போது புதிய DA உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி!

இப்போது, மத்திய அரசாங்கம் ஜூலை தவணைக்கான அகவிலைப்படியை உயர்த்தினால், 7வது ஊதியக் குழுவின் கீழ் ரூ.18,000 ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.540 வரை டிஏ உயர்த்தப்படும். அதே நேரத்தில், அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அல்லது அடிப்படை ஊதியமும் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!