Infosys நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

0
Infosys நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
Infosys நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
Infosys நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ், 2023ம் நிதியாண்டில் 55,000 புதிய பட்டதாரிகளை தனது வளாகங்களில் பணியமர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்புகள்

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப சேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய IT நிறுவனமான இன்போசிஸ் 2023ம் நிதியாண்டில் 55,000 புதிய பட்டதாரிகளை தனது வளாகத்தில் பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், ‘பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

ஆனால் அவர்கள் குறுகிய காலத்தில் புதிய திறன்களை கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும். அந்த வகையில் 2023ம் நிதியாண்டில் சுமார் 55,000 பட்டதாரிகளை நாங்கள் பணியமர்த்துவோம். அடுத்த ஆண்டு (FY23) இந்த எண்ணிக்கை அதிகளவு இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது புதிய பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் சேருவதற்கும், இதன் மூலம் நிறுவனம் வளர்ச்சியடைவதற்கும் இந்த அறிவிப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம், 2022 நிதியாண்டில் ஆண்டு வருவாயை 20 சதவீதம் உயர்த்துவதை இலக்காக கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவிலான டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொள்வதன் மூலம், வாடிக்கையாளர் மற்றும் பிற பங்குதாரர்களின் விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.10 லட்சத்திற்குள் கூடுதலான சிகிச்சைத்தொகை!

இதற்கிடையில், கடந்த டிசம்பர் மாத காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 12 சதவிகிதம் உயர்ந்து ரூ.5,809 கோடியாக அதிகரித்து இருப்பதாக அறிவித்தது. அதே நேரத்தில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும் அதன் வருடாந்திர வருவாய் கணிப்பை இந்நிறுவனம் உயர்த்தி உள்ளது. இப்போது நடப்பு நிதியாண்டிலும், நிலையான நாணய அடிப்படையில் 19.5 முதல் 20 சதவீத வருவாய் வளர்ச்சியை இன்போசிஸ் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!