Infosys நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பணி, சம்பளம் & விண்ணப்ப முறைகள் விளக்கம்!

0
Infosys நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - பணி, சம்பளம் & விண்ணப்ப முறைகள் விளக்கம்!
Infosys நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - பணி, சம்பளம் & விண்ணப்ப முறைகள் விளக்கம்!
Infosys நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பணி, சம்பளம் & விண்ணப்ப முறைகள் விளக்கம்!

இந்தியாவின் முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் புதிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை துவங்குவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இது தொடர்பான வேலை விவரங்கள், தகுதி, விண்ணப்பமுறைகள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் ஓய்ந்திருக்கும் சூழலில் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகள் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளன. அதே நேரத்தில் கொரோனாவால் முடக்கப்பட்ட இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளும் தற்போது பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக TCS, இன்போசிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகளவு புதிய பணியமர்த்தல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நாடு முழுவதும் உள்ள தனது கிளை அலுவலகத்திற்கு பல்வேறு பிரிவுகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதன் கீழ் இன்போசிஸ் நிறுவனம் தற்போது, RPA டெவலப்பர் மற்றும் ஆலோசகர், முதன்மை கட்டிடக் கலைஞர், நிபுணர் புரோகிராமர்-ஜாவா மைக்ரோ சர்வீஸ் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளை துவங்க இருக்கிறது. இதில் பெரும்பாலான வேலைகள் பெங்களூருவில் அமைந்துள்ள அலுவலகத்தை அடிப்படையாக கொண்டவை.

இனி டாஸ்மாக் கடைகளில் ‘இது’ கட்டாயம் – மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை!

இதற்கிடையில் இன்போசிஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சேவையை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவில் 19,230 பட்டதாரிகளையும், வெளிநாடுகளில் 1,941 பேரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் சமீபத்தில் தனது திறமைக்குழுவை வலுப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் சேர்த்து சுமார் 2,59,619க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இன்போசிஸ் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள், தகுதி, விண்ணப்ப முறைகள் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை விவரங்கள்:

ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர்- MEAN அல்லது MERN:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் UI & Markup Language, NodeJS, UI & Markup Languages, Angular JS, HTML/ CSS/ Java script/ Bootstrap/ J query/ HTML5/ CSS3/ AngularJS/ Angular 2/ Angular 4/ Angular 5/ Angular 6/ Angular 7/ Angular 8/ Angular.J.S ஆகியவற்றில் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலை பெங்களூருவை அடிப்படையாக கொண்டது. இன்போசிஸ் நிறுவனத்தில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமரின் பணிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.8,25,513 கொடுக்கப்படுகிறது.

சிறப்பு புரோகிராமர் – ஜாவா மைக்ரோ சர்வீசஸ்:

இன்போஸிஸ் நிறுவனத்தின் சிறப்பு புரோகிராமர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஜாவா, ஹைபர்னேட் காஸ்ட் ஆகியவற்றில் திறன் மிக்கவராக இருக்க வேண்டும். தவிர குறைந்தபட்ச கணினி தேவைகள் மற்றும் சுறுசுறுப்பான பயன்முறையில் தீர்வுகளை வழங்குவதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலை பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறப்பு புரோகிராமர் பணிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.1,80,429 முதல் ரூ.21,23,761 வரை கொடுக்கப்பட இருக்கிறது.

சிறப்பு புரோகிராமர் – பிக்டேட்டா:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிக்டேட்டா, ஸ்பார்க் ஓப்பன் சோர்ஸ் மற்றும் ஸ்கேலா பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்த வேலை பெங்களூருவை அடிப்படையாக கொண்டது.

விண்ணப்ப முறை:
  • விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.infosys.com/careers/apply.html என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • பிறகு சுயவிவரங்களை PDF அல்லது MS வடிவத்தில் பதிவேற்ற வேண்டும்.
  • இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த பணிகளுக்கு 20-40 வயதிற்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!