‘பாக்கியலட்சுமி’ சீரியல் எழில் யார் தெரியுமா? ரசிகர்களை வியக்க வைக்கும் தகவல்கள்!

0
'பாக்கியலட்சுமி' சீரியல் எழில் யார் தெரியுமா? ரசிகர்களை வியக்க வைக்கும் தகவல்கள்!
'பாக்கியலட்சுமி' சீரியல் எழில் யார் தெரியுமா? ரசிகர்களை வியக்க வைக்கும் தகவல்கள்!
‘பாக்கியலட்சுமி’ சீரியல் எழில் யார் தெரியுமா? ரசிகர்களை வியக்க வைக்கும் தகவல்கள்!

விஜய் டிவியின் பாக்யலக்ஷ்மி சீரியலில் 2 வது மகனாக வரும் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஷால் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் அனைத்தும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் உள்ளது.

நடிகர் விஷால்:

பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக சின்னத்திரையில் புகழை அடைந்து , தற்போது அனைத்து தாய்மார்களுக்கும் செல்ல பிள்ளையாக மாறியுள்ளவர் தான் நடிகர் விஷால். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற வேடத்தில் தன் அம்மாவிற்கு மிகவும் சப்போர்ட் பண்ணும் குணம் கொண்டவராகவும், வீட்டில் உள்ள அனைவரையும் அக்கறையோடு கவனித்து கொள்பவராகவும் நடித்துள்ளார். இன்று வெளியான ஒரு வீடியோவில் கூட பாக்கியலட்சுமி சீரியல் ரசிகைகள் இவரை மிகவும் புகழ்வது போல் உள்ளது. இந்த சீரியல் மூலம் அதிக அளவு புகழை அடைந்து விட்டார் நடிகர் விஷால் என்றே சொல்லலாம்.

இந்திய அஞ்சல் துறையில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி! விண்ணப்பங்கள் வரவேற்பு!

நடிகர் விஷால் பிப்ரவரி 13ம் தேதி அன்று 1996ம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது விஷால் 26 வயதை அடைந்துள்ளார். விஷால் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள AVM மெய்யப்பன் மெட்ரிக் பள்ளியில் முடித்துள்ளார். இதன்பிறகு பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவருக்கு தனது சிறு வயது முதல் தொகுப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்துள்ளது. இதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். அவர் கல்லூரியில் படிக்கும் போதே வெளிச்சம் என்ற சேனலில் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி!

இதன் பிறகு விஜய் டிவியின் அது இது எது,கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் நடித்தார். பின்னர் அதன் நாயகி ஸ்ரீத்து உடன் சேர்ந்து ஜோடி அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அரண்மனைக்கிளி சீரியலில் ஆகாஷ் என்ற வேடத்திலும், ஒரு குறும்படத்திலும் நடித்துள்ளார். இவர் விஜயின் மாஸ்டர் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!