Common Wealth 2022: 9 பதக்கங்களை வென்ற இந்திய அணி – குவியும் பாராட்டுக்கள்!

0
Common Wealth 2022: 9 பதக்கங்களை வென்ற இந்திய அணி - குவியும் பாராட்டுக்கள்!
Common Wealth 2022: 9 பதக்கங்களை வென்ற இந்திய அணி - குவியும் பாராட்டுக்கள்!
Common Wealth 2022: 9 பதக்கங்களை வென்ற இந்திய அணி – குவியும் பாராட்டுக்கள்!

இங்கிலாந்தில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

காமன்வெல்த் போட்டிகள்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது கடந்த ஜூலை 29 ஆம் தேதி தொடங்கப்பட்டு 5வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா சார்பில் மூன்று தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளி பதக்கங்களும் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளதால் மொத்தம் 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Exams Daily Mobile App Download

அதில் மகளிருக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் ஆகும். மேலும் ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா இந்தியா சார்பில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி சிறப்பாக விளையாடி அவர் மொத்தம் 313 கிலோ தூக்கி இந்தியா சார்பில் மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய முறை அறிமுகம் – செயலாளர் அறிவிப்பு!

பளுதூக்குதல் பிரிவில் சிறப்பாக விளையாடியுள்ள இந்திய வீரர்கள், மொத்தமாக இந்திய அணி தரப்பில் ‘3தங்கம் 2வெள்ளி 1வெண்கல பதக்கம்’ உட்பட 6 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளனர். அதனால் இந்திய அணி காமன்வெல்த் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் 9 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி, பல போட்டிகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளது. நேற்று நடந்த போட்டியிலும் இந்தியா சார்பில் மூன்று பதக்ககங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here