T20 World Cup – இந்திய அணி செப்.6ம் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
T20 உலகக்கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணி வருகிற செப்டம்பர் 6ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் 15 வீரர்கள் கொண்ட அணியின் விபரம் வெளியிடப்படவுள்ளது.
உலகக்கோப்பை தொடர்:
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த T20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 17ம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. சுற்று 1 போட்டிகள் அக்டோபர் 22 வரை நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கி, போட்டியின் சூப்பர் 12 நிலைக்குச் செல்லும்.
IND vs ENG 4வது டெஸ்ட் இன்று தொடக்கம் – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
போட்டியின் இரண்டாவது சுற்று அக்டோபர் 23 அன்று அபுதாபியில் தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதைத் தொடர்ந்து துபாயில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெறும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா துபாயில் அக்டோபர் 30 ஆம் தேதி மோதுகின்றன. நவம்பர் 6 ஆம் தேதி அபுதாபியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஷார்ஜாவில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகளுடன் இது நிறைவடையும். T20 உலகக்கோப்பையில் இந்திய அணி அக்டோபர் 24ம் தேதி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
TN Job “FB
Group” Join Now
முதல் அரையிறுதி நவம்பர் 10 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அபுதாபியில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 11 அன்று துபாயில் நடத்தப்படும். உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி துபாயில் நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இதற்கான இந்திய அணி செப்.6 அல்லது 7ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று (செப்.2) தொடங்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத உள்ள 4வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்தவுடன் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.