இந்திய ரயில்வேயின் RRB NTPC 2ம் நிலை தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
இந்திய ரயில்வேயின் RRB NTPC 2ம் நிலை தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்திய ரயில்வேயின் RRB NTPC 2ம் நிலை தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்திய ரயில்வேயின் RRB NTPC 2ம் நிலை தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்திய ரயில்வே வாரியத்தின் RRB NTPC இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேர்வு நடைபெறும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வர்கள் தேர்வு நடைபெறுவதற்கு 4 நாட்கள் முன்பாக ஆன்லைன் வாயிலாக தேர்வுக்கூட அனுமதி சீட்டை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB NTPC:

இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் வேலை இழந்தவர்கள் பலரும் இந்த அறிவிப்புகள் மூலம் வேலைக்காக முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. அதன்படி மாநில அரசுகள் துறை வாரியாக காலிப்பணியிடங்களை அறிவித்து அதற்கான போட்டித்தேர்வுகளையும் நடத்தி வருகிறது. மாநில அரசை தொடர்ந்து மத்திய அரசும் காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – நடவடிக்கை தீவிரம்!

அந்த வகையில் SSC தேர்வாணையம் மத்திய அரசு துறையில் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் மூலம் நிரப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்திய ரயில்வே வாரியத்தின் RRB NTPC இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது. இந்த RRB NTPC இரண்டாம் நிலை தேர்வு நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகரிஸ் – கிராஜூவேட் & அன்டர் கிராஜுவேட் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வானது புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், கோரக்பூர், மும்பை, முசாபர்பூர், ராஞ்சி, செகந்திராபாத் ஆகிய இடங்களில் ஜூன் 16ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 12ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 14ம் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது. அதே போல அஜ்மீர், போபால், சென்னை, குவகாத்தி, பாட்னா, பெங்களூரு, ஜம்மு-ஸ்ரீநகர், கொல்கத்தா, சிலிகுரி, அகமதாபாத், அலகாபாத், மால்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஜூன் 15ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 17ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் www.rrbcdg.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்னர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மேலும் தேர்வு குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here