இந்திய ரயில்வேயில் 1.4 லட்ச பணியிடங்களுக்காக மெகா ஆட்சேர்ப்பு தேர்வு !!

1
இந்திய ரயில்வேயில் 1.4 லட்ச பணியிடங்களுக்காக மெகா ஆட்சேர்ப்பு தேர்வு !!
இந்திய ரயில்வேயில் 1.4 லட்ச பணியிடங்களுக்காக மெகா ஆட்சேர்ப்பு தேர்வு !!

இந்திய ரயில்வேயில் 1.4 லட்ச பணியிடங்களுக்காக மெகா ஆட்சேர்ப்பு தேர்வு !!

இந்தியா முழுவதும் காலியாக உள்ள 1.4 லட்சம் ரயில்வே பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே தற்போது திட்டமிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப 21 ரயில்வே வாரியங்கள் மூலம் 3 கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு :

இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து ஆன ரயில்வே துறையில் பல ஆயிர காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றினை நிரப்பட மண்டல வாரியாகவும், ரயில்வே கோட்டங்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறன்றனர். அதன் மூலம் பணியமர்த்தவும் படுகின்றனர்.

அதே போல் இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் Ministerial and  Isolated , NTPC மற்றும் Level-1 ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 1.4 லட்சம் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு ஆனது கடந்த ஆண்டே வெளியிடப்பட்டு விட்டது. இந்த பணிகளுக்கு 2.44 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தேர்வானது விரைவில் நடத்தப்பட உள்ளது.

மெகா ஆட்சேர்ப்பு தேர்வு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற துவங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்த தேர்வுகள் தற்போது இன்று முதல் (டிச.15) நடைபெற உள்ளது. டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை Ministerial and Isolated பிரிவினை சேந்தவர்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் டிசம்பர் 28 முதல் NTPC தேர்வுகளும் 2021 ஏப்ரலில் Level-1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக (தோராயமாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் அபாயத்திற்கு இடையே இந்த தேர்வுகள் நடைபெற இருப்பதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்வு ஆனது நடத்தப்பட உள்ளது. இதனால் விரைவில் ரயில்வேயில் காலியாக உள்ள 1.4 லட்ச காலியிடங்கள் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download RRB NTPC Exam Date 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!