இந்தியாவில் ரயில்கள் மே 3 வரை இயங்காது – ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

0
இந்தியாவில் ரயில்கள் மே 3 வரை இயங்காது – ரயில்வே அதிகாரிகள் தகவல்
இந்தியாவில் ரயில்கள் மே 3 வரை இயங்காது – ரயில்வே அதிகாரிகள் தகவல்

இந்தியாவில் ரயில்கள் மே 3 வரை இயங்காது – ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த காரணமாக ஊரடங்கு உத்தரவினை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் மே 3 வரை எந்த விதமான ரயில்களும் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரயில்கள் இயங்காது:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விதமான ரயில் மற்றும் விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில் அதற்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் ரயில் மற்றும் விமான சேவைகள் தொடங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளார்.

பிரிமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 நள்ளிரவு வரை இயக்கப்படாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!