விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 261 சிறப்பு ரயில்கள் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

0
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 261 சிறப்பு ரயில்கள் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 261 சிறப்பு ரயில்கள் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 261 சிறப்பு ரயில்கள் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 10ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக 261 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள்:

கடந்த 20202ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டுக் கூட வெளியில் வர முடியாத சூழல் இருந்தது. இதனால் கடந்த வருடம் எந்த மதம் சார்ந்த மற்றும் பொது பண்டிகைகளும் கொண்டாடப்படவில்லை. இது மக்களுக்கு பெரும் மனத்தாங்களாகவே இருந்து வந்தது. இந்த வருடம் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10ம் தேதி வர இருக்கிறது.

கேரள மாநிலத்தின் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் – நிபா வைரஸ் எதிரொலி!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களும் விரும்பி கொண்டாடும் பண்டிகையாகும். தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்து பகுதிகளிலும் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக 261 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய ரயில்வேயில் 201 சிறப்பு ரயில்களும், மேற்கு ரயில்வேயில் 42 சிறப்பு ரயில்களும், கொங்கன் வழித்தடத்தில் 18 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் செப்டம்பர் 20 வரை இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் செல்லும் வழித்தடம் மற்றும் பல விவரங்களையும் www.enquiry.indianrail.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்க உறுதி செய்யப்பட்ட பயணசீட்டு உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அனைத்து சமயங்களிலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்திய ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!