இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!

0
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி மற்றும் மேலும் சில தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அஞ்சல் துறையில் உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடம் மற்றும் 29 பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? ஓமைக்ரானை தொடர்ந்து “பிஏ 2” வைரஸ் அச்சம்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 27 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது. அத்துடன் இதில் குறைவான அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளதால் விண்ணப்பத்தார்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து முதுநிலை மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, C-121, Naraina Industrial Area Phase-1, Naraina, New Delhi-110028 என்ற முகவரிக்கு வருகிற மார்ச் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!