உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட தலைவர் நரேந்திர மோடி – ட்விட்டர் தகவல்!

0
உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட தலைவர் நரேந்திர மோடி - ட்விட்டர் தகவல்!
உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட தலைவர் நரேந்திர மோடி - ட்விட்டர் தகவல்!
உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட தலைவர் நரேந்திர மோடி – ட்விட்டர் தகவல்!

பொதுவாக சமூக வலைதளங்களில் ஆர்வம் இல்லாத அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் மோடியை ட்விட்டர் வலைதளத்தில் 70 மில்லியன் அதாவது 7 கோடி பேர் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் பாலோவர்ஸ்:

உலகம் முழுவதும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் சமூக வலைதளங்களில் மிக முக்கியமாக இடத்தை வகிப்பது ட்விட்டர் இணையதளம் தான். அதாவது பல உலக தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய இணையதளமாக இந்த ட்விட்டர் செயலி விளங்குகிறது. இந்த செயலியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வரும் நிலையில், உலகளவில் சுமார் 7 கோடி பின்தொடர்பவரை அவர் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சமூக வலைதள செயல்பாட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

Google நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுந்தர் பிச்சை அறிக்கை!

முன்னதாக குஜராத் மாநில முதல்வராக பிரதமர் மோடி பதவி வகித்த போது, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகிறார். அப்போது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், மக்களுக்கான வாழ்த்துக்கள், முக்கிய செய்திகள் போன்றவற்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை 1 லட்சம் பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அன்று முதல் அதிகமான பின்தொடர்பவரை பெற்று வந்த பிரதமர் மோடி, இன்று சுமார் 70 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 60 மில்லியன் பின்தொடர்பவரை கொண்டிருந்த மோடி, ஒரு ஆண்டில் மட்டும் கூடுதலாக 10 மில்லியன் பேரை பெற்றுள்ளார். இது தவிர கடந்த ஒரு ஆண்டில் போப் பிரான்சிசை 53 மில்லியன் பேரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 30.9 மில்லியன் பேரும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை 129.8 மில்லியன் பேரும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை 7.1 மில்லியன் பேரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 26.3 மில்லியன் பேரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை 19.4 மில்லியன் பேரும் ட்விட்டரில் பின்தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here