e-RUPI ‘எதிர்கால டிஜிட்டல் கட்டணத் தீர்வு’ – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!

0
e-RUPI 'எதிர்கால டிஜிட்டல் கட்டணத் தீர்வு' - பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!
e-RUPI 'எதிர்கால டிஜிட்டல் கட்டணத் தீர்வு' - பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!
e-RUPI ‘எதிர்கால டிஜிட்டல் கட்டணத் தீர்வு’ – பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பு!

டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், ஒரு புதிய டிஜிட்டல் கட்டணத் தீர்வு சேவைகளை ஆகஸ்ட் 2 ஆம் தேதி (இன்று) முதல் அறிமுகம் செய்ய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கட்டணம்

தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் இந்தியாவை ஒரு புதிய பாதைக்கு வழிநடத்தி செல்ல பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில் பல வகையான அரசின் சேவைகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வரிசையில் எதிர்காலத்துக்கான, ஒரு சிறந்த டிஜிட்டல் கட்டண தீர்வான e-RUPI ஐ பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது, டிஜிட்டல் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் அறிவுறுத்தல்!

அதன்படி மக்களின் பயன்பாடுகளுக்கான ஒரு எதிர்கால டிஜிட்டல் கட்டண தீர்வான e-RUPI சேவைகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி, மாலை 4:30 மணியளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என கூறியுள்ளார். இவ்வகை சேவைகள் பணமில்லா மற்றும் தொடர்பற்ற டிஜிட்டல் பேமெண்ட், சேவை ஸ்பான்சர்கள் மற்றும் பயனாளிகளை டிஜிட்டல் முறையில் இணைத்தல் உள்ளிட்ட பல சேவைகளில் தாமதம் இல்லாத விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவையும் e-RUPI யின் நன்மைகளில் அடங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, e-RUPI என்பது பணமில்லா மற்றும் தொடர்பற்ற கருவியாகும். இது இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் நிதி சேவைகள் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது பயனாளிகளின் மொபைல் போன்களுக்கு வழங்கப்படும் ஒரு QR குறியீடு அல்லது SMS அடிப்படையிலான e-Voucher ஆகும். அதன் கீழ் சேவை வழங்குநரிடம் அட்டை, டிஜிட்டல் பணம் செலுத்தும் பயன்பாடு அல்லது இணைய வங்கி அணுகல் இல்லாமல் e-RUPI பயனர்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் டிஜிட்டல் கட்டணத் தீர்வு சேவை, ஸ்பான்சர்களை பயனாளிகள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் இணைக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ஒரு பரிவர்த்தனை முடிந்த பின்னரே ஒரு சேவை வழங்குநருக்கு பணம் செலுத்துவதை e-RUPI உறுதி செய்கிறது. மேலும் எவ்வித இடைத்தரகரும் ஈடுபடாமல், சேவை வழங்குநருக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை இது உறுதி செய்கிறது. இந்த e-RUPI சேவைகளை தாய் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்கள், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, உர மானியங்கள் போன்றவற்றின் கீழ் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் திட்டங்களின் கீழ் சேவைகளை வழங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!