கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு இந்தியா மரியாதை நிலம், வான், ஆழ்கடல் பகுதிகளில் மரியாதை செலுத்தியது இந்திய கடற்படை

0
கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு இந்தியா மரியாதை நிலம், வான், ஆழ்கடல் பகுதிகளில் மரியாதை செலுத்தியது இந்திய கடற்படை
கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு இந்தியா மரியாதை நிலம், வான், ஆழ்கடல் பகுதிகளில் மரியாதை செலுத்தியது இந்திய கடற்படை

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக போராடி வருவோருக்கு ஒட்டுமொத்த தேசத்துடன் இந்திய கடற்படை மே 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இணைந்து நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தியது.

நிலப்பகுதி

கொரோனாவை கட்டுப்படுத்த போராடுவோருக்கு பாராட்டு. மூன்று பிரிவுகள் (மேற்கு, தெற்கு, கிழக்கு கடற்படை பிரிவுகள்) அந்தமான், நிகோபார் படைப் பிரிவைச் சேர்ந்த கமாண்டர்கள் மூத்த கடற்படை அதிகாரிகள் இணைந்து சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிராக போராடும் மற்ற பணியாளர்களை சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

மனித சங்கிலி மூலம் உருவாக்கப்பட்ட வாழ்த்து சொற்கள்: கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா கடற்படை தளத்தில் கடற்படையைச் சேர்ந்த 1,500 வீரர்கள் இணைந்து மனித சங்கிலி மூலம், கொரோனா போராளிகளுக்கு சொற்களை உருவாக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

கடற்படை இசை நிகழ்ச்சி. காலையில்  கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தின் எதிரே கொச்சியின் முக்கிய அடையாளமான விக்ராந்த்-வேண்டுருத்தி பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மும்பையில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் விமானந்தாங்கி போர்க்கப்பலான விராத்-திலும், விசாகப்பட்டினம் துறைமுகத்திலும் கடற்படை இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வான்வழி

நன்றி தெரிவிக்கும் ஒரு அம்சமாக, கடற்படையின் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம், கொச்சி, விசாகப்பட்டினம், மும்பை, கோவா, அந்தமான்-நிகோபார் தீவு ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது மலர் தூவப்பட்டது.

கடற்பகுதி :

கடற்படையின் கிழக்குப் பிரிவு.

பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படையின் ஜலஸ்வா கப்பல் மற்றும் சாவித்ரி கப்பல்கள், கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோருக்கு கடலிலிருந்தவாறே மரியாதை செலுத்தின.

கடற்படையின் மேற்குப் பிரிவு

அரபிக்கடல் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல்களில் பணியாற்றும் இந்திய கடற்படை வீரர்கள், கொரோனாவுக்கு எதிராக உறுதியுடன் போராடும் வீரர்களுக்கு தங்களது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

கர்வார் அருகே நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் உள்ள இந்திய கடற்படை வீரர்கள், கொரோனா போராளிகளுக்காக மனித சங்கிலி மூலம் சொற்களை ஏற்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

கடற்படையின் தெற்குப் பிரிவு. கொச்சியில் கடற்படையின் 7 அதிவேக இடைமறிப்பு கப்பல்கள், கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேனரை வைத்திருந்தன.

நங்கூரமிடப்பட்ட கப்பல்களில் விளக்குகள் அலங்காரம்.

நாள்முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் நிறைவாக, அந்தமான்-நிகோபார் தீவுகள் உள்ளிட்ட 9 துறைமுக நகரங்களில் இந்திய கடற்படையின் 25 போர்க்கப்பல்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரவு 7-30 மணிமுதல் பட்டொளி வீசச்செய்யும் துப்பாக்கிகளால் சுட்டும், ஒலியெழுப்பியும் கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!