IPL 2022: மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 போட்டிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் வேளையில், 5 முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 11 சிறப்பான வீரர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

கடந்த 14 சீசன்களாக நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 20-20 கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் விரைவில் துவங்க இருக்கிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களில் இருந்தும் மாறுபட்டு இம்முறை புதிய அணிகள், புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள், புதிய ஸ்பான்சர்ஸ் என பல புதிய விஷயங்களுடன் 15வது IPL போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் IPL போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் சிறப்பான வீரர்களை தங்களது அணியில் பெற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு உரிமையாளர்களும் கடும் போட்டியில் ஈடுபட்டிருந்தனர்.

பிப்ரவரி 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு! தேர்தல் எதிரொலி!

அந்த வகையில் 5 முறை IPL சாம்பியன்ஷிப் அணியான மும்பை இந்தியன்ஸும் தங்களது அணிக்காக சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷானை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15.25 கோடிகளை செலவு செய்திருந்தது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யா குமார் யாதவ், போலார்டு, ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் (ரூ.8.25 கோடி), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (ரூ.8 கோடி) ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகின்றனர். ஏற்கனவே மும்பை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுடன், ஆர்ச்சர் இணைந்திருப்பது மும்பை அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தும் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 7வது ஊதிய கமிஷன்! முதல்வர் விளக்கம்!

மேலும், டெவால்ட் ப்ரீவிஸ், பசில் தம்பி, எம் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், அன்மோல்ப்ரீத் சிங், ரமன்தீப் சிங், ராகுல் புத்தி, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஃபேபியன் ஆலன், ஆர்யன் ஜூயல் ஆகியோர் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போது IPL 2022 போட்டிக்கான முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சூப்பர் 11 அணியுடன் களம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், MI அணியில் இடம்பிடித்துள்ள சூப்பர் 11 வீரர்களின் முழு விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.

  • ரோஹித் சர்மா (கேப்டன்)
  • இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
  • சூர்யகுமார் யாதவ்
  • அன்மோல்பிரீத் சிங்
  • கீரன் பொல்லார்ட்
  • ஃபேபியன் ஆலன்
  • திலக் வர்மா
  • முருகன் அஷ்வின்
  • டேனியல் சாம்ஸ்
  • ஜெய்தேவ் உனத்கட்
  • ஜஸ்பிரிட் பும்ரா

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!