அரசு பணியிடங்களுக்கு நேர்காணல் நியமனம் ரத்து !

0
அரசு பணியிடங்களுக்கு நேர்காணல் நியமனம் ரத்து !
அரசு பணியிடங்களுக்கு நேர்காணல் நியமனம் ரத்து !

அரசு பணியிடங்களுக்கு நேர்காணல் நியமனம் ரத்து !

இந்தியாவில் உள்ள அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்காணல் நியமனம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தற்போது செய்து குறிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதன் நடைமுறைகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நாட்டில் உள்ள அரசு பணிகள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாகவே நிரப்பப்படுகிறது. அவற்றிலும் பெரும்பாலானவை நேர்காணல் நியமனம் மூலமாகவே நிரப்பப்படுகிறது. ஆனால் அவற்றில் முறைகேடுகள் தான் அதிக அளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பிரதமர் வேண்டுகோள் !

இதனால் பிரதமர் மோடி கடந்த 2015 ம் ஆண்டில் சுதந்திர தின உரையின் போது மத்திய அரசு பணிகளில் குரூப் பி (நான் கெஸடட்) மற்றும் குரூப் சி பிரிவுகளில் நேர்காணல் கூடாது. அதற்கு பதிலாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யலாம் என கூறி இருந்தார்.

நேர்காணல் நியமனம் ரத்து !

ஏனெனில் கடந்த காலங்களில் நேர்காணலின் போது நிகழ்ந்த குற்றங்கள் மற்றும் புகார்கள் ஏராளமாக இருந்தது. அதுமட்டுமல்லாது வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணத்தை பெற்றுக்கொண்டு சலுகை காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. நேர்காணலை ரத்து செய்வதோடு எழுத்து தேர்வு நடத்துவதன் மூலம் அனைவருக்கும் சம அளவிலான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பிரதமரின் இந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்தின. அதே நேரத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவை அமல்படுத்த தயங்கின. தற்போதைய நிலையில் ஜம்முகாஷ்மீர், லடாக் உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் வரையில் நேர்காணல் நடைமுறையை நிறுத்தி உள்ளது. இது திருப்தி அளிப்பதாக உள்ளது என அமைச்சர் கூறினார்.

இதன் மூலம் அரசு பணிகளுக்கு இனி வரும் அறிவிப்புகளில் நேர்காணல் தேர்வுகளுக்கு பதிலாக எழுத்துத்தேர்வு மூலமாக மட்டுமே நியமனம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது எஞ்சியுள்ள மாநிலங்களும் இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here