இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் முடிவு என்ன?

0
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமரின் முடிவு என்ன?
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமரின் முடிவு என்ன?இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமரின் முடிவு என்ன?
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் முடிவு என்ன?

நாடு முழுதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக, நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு அமல் :

இந்தியா கொரோனா மூன்று அலைகளை சந்தித்து விட்டது. இதில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. அதாவது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா 3வது அலை வேகமாகப் பரவினாலும் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே இருந்தது. இந்த அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் சீனா, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறக்கபிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா மீண்டும் தலை தூக்கி உள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லி, தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, டெல்லி, தமிழகம் உள்ளிட்டவற்றில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும், 1,009 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு , நேற்றைய பாதிப்புடன் சுமார் 60% அதிகமாகும். மேலும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையின்படி, கடந்த 11 ஆம் தேதி முதல், 18 ஆம் தேதி வரை, மாநிலத்தில் 3 மடங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொது மக்கள் அச்சபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் எனக் கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில், கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!