2021 பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய மங்கை – 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெற்றி!

0
2021 பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய மங்கை - 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெற்றி!
2021 பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய மங்கை - 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெற்றி!
2021 பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய மங்கை – 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெற்றி!

சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து என்பவர் 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். 21 ஆண்டுகளுக்கு பின்னர் லாரா தாத்தாவை தொடர்ந்து இந்தியாவிற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

பிரபஞ்ச அழகி:

2021ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டி டிசம்பர் 12ம் தேதியான நேற்று இஸ்ரேலின் ஈலாட்டில் உள்ள யுனிவர்ஸ் டோமில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக, சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து கலந்து கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மகுடம் சூட்டினார்.

தமிழகத்தில் டிச.15ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து 21 வயதான மாடல் ஆவார். ஹர்னாஸ் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளார். இவருக்கு முன், லாரா தத்தா 2000 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி, மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டி 70 வது பிரபஞ்ச அழகி போட்டியாகும். போட்டியில், பல்வேறு கட்டங்களை தாண்டி 80 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் இருந்தனர். இதில் 2ம் இடத்தை மிஸ் பராகுவே நதியா ஃபெரீரா மற்றும் 3ம் இடத்தை பிடித்தவர் தென்னாப்பிரிக்கா லலேலா மஸ்வானே பிடித்தனர்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிபர் தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

ஹர்னாஸ் சந்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சண்டிகரின் நகரப் பகுதிகளில் முடித்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார். மேலும், யாரா தியான் பூ பரன் மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் அவர் நடித்துள்ளார். டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர் 2017, மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா 2018 மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 ஆகிய பட்டங்களையும் ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here