இந்தியப் படைகள் (பாதுகாப்பு) செய்திகள் – நவம்பர் 2018

0

இந்தியப் படைகள் (பாதுகாப்பு) செய்திகள் –நவம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018

இங்கு நவம்பர் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

 இந்திய பாதுகாப்பு படைகள்

தர்மா கார்டியன் – 2018

 • இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவங்களுக்கு இடையேயான தர்மா கார்டியன் – 2018 எனும் கூட்டு ராணுவ பயிற்சி மிசோராமில் உள்ள வன்முறைத் தடுப்பு மற்றும் வனப்போர் பள்ளியில் நவம்பர் 1, 2018 அன்று தொடங்கியது.

இராணுவ விமானப் பிரிவின் 33 வது தொடக்க தின கொண்டாட்டம்

 • 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி இராணுவ விமானப் பிரிவின் 33 வது தொடக்க தினத்தை இந்தியா கேட், புது தில்லியில் கொண்டாடியது.

ICGS வராஹா அறிமுகப்படுத்தப்பட்டது

 • இந்திய கடலோர காவல்படை சென்னையில் ICGS வராஹா என்று அழைக்கப்படும் ஒரு புதிய கடல் ரோந்து கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கப்பல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டது.

முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை உயர்த்தியது

 • ராணுவப் படைகளின் வருவாய் தொடர்பான கொள்முதல் சார்ந்த முடிவுகளை விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து மடங்காக உயர்த்தியது.
 • இந்த புதிய அதிகாரம் வழங்கப்பட்டதின் மூலம், ரூ.500 கோடி வரை செலவு செய்வதற்கான அதிகாரம் துணைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

SIMBEX 18

 • “சிங்கப்பூர்-இந்தியா இருதரப்பு கடற்படை பயிற்சி” சிம்ப்எக்ஸ் [SIMBEX]ன் 25-வது பதிப்பு, 2018 நவம்பர் 10 முதல் 21 வரை, அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் திட்டமிடப்பட்டுள்ளது.
 • சிங்கப்பூர் மற்றும் இந்தியா இருதரப்பு கடற்படை பயிற்சியின் வெள்ளி விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது.

கே9 வஜ்ரா, எம்777 ஹோவிட்ஸர் துப்பாக்கிகள் இராணுவத்தில்சேர்க்கப்பட்டன

 • மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலாலி பீரங்கி நிலையத்தில், கே9 வஜ்ரா மற்றும் எம்777 ஹோவிட்ஸர் உட்பட புதிய பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் உபகரணங்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டன.

இந்த்ரா – 2018

 • கிளர்ச்சிகளை முறியடிப்பதற்காக ஐ.நா. ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இந்த்ரா – 2018 பாபினா ராணுவ முகாமில் உள்ள (உத்தரப்பிரதேச மாநிலம்) பாபினா துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில் நவம்பர் 18 முதல் நடைபெற உள்ளது.

10 வது இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் ஆண்டு விழாதுவக்கம்

 • இந்திய பெருங்கடல் கடற்படை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா கொச்சியில் தொடங்கியது.

ஜனவரி மாதத்தில் கடல் கண்காணிப்பு கடலோரப் பாதுகாப்பு பயிற்சி

 • இந்திய கடற்படை அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் முதல் கடலோர பிரதான நிலப்பரப்பு மற்றும் தீவு பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்த உள்ளது.

இராணுவப்பயிற்சி  தர்ம கார்டியனின் நிறைவு விழா – 2018

 • இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானிய இராணுவம் அவர்களின் கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘தர்ம கார்டியன்’ – 2018 மிசோரத்தில் நிறைவடைந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்.

மாலத்தீவு கடலோர காவல்படை கப்பல் ஹுராவீ பழுதுபார்க்கப்பட்டது

 • மாலத்தீவு கடலோர காவல்படை கப்பலான (MCGS) ஹுராவீ கப்பல் வெற்றிகரமாக விசாகப்பட்டினம் கடற்படை கப்பல்துறை முற்றத்தில் பழுதுபார்க்கப்பட்டு, அந்த கப்பல் முறையாக மாலத்தீவுக்கு ஒப்படைக்கப்பட்டது.

வியட்நாமிற்கு இராணுவ தளபதிகளின் தலைவர் விஜயம்

 • இராணுவ தளபதிகளின் தலைவரான பிபின் ராவத் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

“ஃபோல் ஈகிள்“[Foal Eagle]

 • வடகொரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடரும் வகையில் அமெரிக்கா-தென் கொரியாவும் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் “ஃபோல் ஈகிள்” கூட்டு இராணுவப் பயிற்சியின் அளவைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திரா இராணுவப் பயிற்சி 2018

 • உத்தரபிரதேசத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 11 நாட்கள் நீண்ட இந்திரா இராணுவ கூட்டுப் பயிற்சிகள் ஜான்சியின் பாபினா இராணுவ நிலையத்தில் முடிவடைந்தது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!