இந்திய வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் – இன்று SL vs IND 2வது T20 போட்டி!

0
இந்திய வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் - இன்று SL vs IND 2வது T20 போட்டி!
இந்திய வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் - இன்று SL vs IND 2வது T20 போட்டி!
இந்திய வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் – இன்று SL vs IND 2வது T20 போட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் முடிவு வந்துள்ள நிலையில் இந்தியா, இலங்கைக்கு எதிரான 2வது T20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் அறிவிப்பு:

கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய IPL போட்டிகளில் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மற்ற ஆட்டங்களில் கவனம் செலுத்தி வந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பாண்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

இது ஒரு புறம் இருக்க இலங்கையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரும், நட்சத்திர வீரருமான க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி, T20 உள்ளிட்ட ஆட்டங்களில் கலந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடைபெற்று வரும் T20 போட்டியில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியினர், நேற்று (ஜூலை 27) நடைபெற இருந்த 2 ஆவது 20 ஓவர் போட்டியில் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்நிலையில் தான் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியா – இலங்கைக்கு எதிரான 2 ஆவது T20 போட்டிகள் ஒரு நாள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் க்ருனால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த இந்திய அணியின் மற்ற வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 8 வீரர்களுக்கு நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி, இன்று (ஜூலை 28) 2 ஆவது T20 போட்டியும், நாளை (ஜூலை 29) இறுதி போட்டியும் நடைபெற இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த போட்டிகள் முடிவு பெற்றவுடன் வரும் 30 ஆம் தேதி அன்று இந்திய அணி தாயகம் திரும்புகிறது. ஆனால் தொடர் முடிந்து மற்ற வீரர்கள் இந்தியா திரும்பினாலும், க்ருனால் பாண்ட்யா கொழும்பு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை முடித்து பின்னர் நாடு திரும்ப உள்ளார். இதற்கிடையில் இலங்கை தொடர் முடிந்ததும் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகிய இரு வீரர்களும் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here