10ம் வகுப்பு முடித்தவரா? இந்திய கடலோர காவல்படையில் 300 காலிப்பணியிடங்கள்!
இந்திய கடலோர காவல்படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik பணிக்கென மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 22 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி நிலையங்களில் 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Navik (General Duty) பணிக்கு ரூ.21,700/- என்றும், Navik (Domestic Branch) பணிக்கு ரூ.21,700/- என்றும், Yantrik பணிக்கு ரூ.29,200/- என்றும் மாத சம்பளமாக பெறுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் Written Test, Document Verification, Physical Fitness Test, Initial Medical Exam, Final Medical Exam, Final Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினர் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்