இந்தியன் வங்கி Specialist வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம்!

0
இந்தியன் வங்கி Specialist வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம்!
இந்தியன் வங்கி Specialist வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம்!

இந்தியன் வங்கி Specialist வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம்!

முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Team Lead – 9 பணியிடங்கள் Chartered Accountant – 6 பணியிடங்கள் என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.  01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  SC/ST/PWBD விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- மற்றும் மற்ற விண்ணப்பத்தர்களுக்கு ரூ.1000/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் படி, கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 22/09/2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!