இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

0

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Consultant for Rural Banking பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியன் வங்கியில் (Indian Bank) Consultant for Rural Banking பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.
  • Consultant for Rural Banking பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற / தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் Senior Management அல்லது General Manager பதவி அல்லது அதற்கு சமமான பதவிகளில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Consultant for Rural Banking பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் Indian வங்கியால் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!