வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

வங்கித் துறையில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது இந்தியன் வங்கி (Indian Bank) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant for Rural Banking பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (13.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Consultant for Rural Banking
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி பணியிடங்கள்:

இந்தியன் வங்கியில் (Indian Bank) Consultant for Rural Banking பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Indian Bank கல்வி விவரம்:

Consultant for Rural Banking பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Indian Bank அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற / தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் Senior Management அல்லது General Manager பதவி அல்லது அதற்கு சமமான பதவிகளில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Indian Bank வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Indian Bank ஊதிய விவரம்:

Consultant for Rural Banking பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் Indian வங்கியால் மாத ஊதியம் பெறுவார்கள்.

Indian Bank தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Indian Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (13.06.2022) வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here