இந்தியன் வங்கியில் Chief Manager வேலைவாய்ப்பு – ரூ.89890/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
இந்தியன் வங்கி ஆனது Chief Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்தியன் வாங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chief Manager பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 30 வயது பூர்த்தியான 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Graduates / Chartered Accountants / IT Graduates தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.89890/- வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.