இராணுவத்துறையில் 40 காலிப்பணியிடங்கள் – ரூ.1,77,500/- வரை ஊதியம்..!

0
இராணுவத்துறையில் 40 காலிப்பணியிடங்கள் - ரூ.1,77,500/- வரை ஊதியம்..!
இராணுவத்துறையில் 40 காலிப்பணியிடங்கள் - ரூ.1,77,500/- வரை ஊதியம்..!
இராணுவத்துறையில் 40 காலிப்பணியிடங்கள் – ரூ.1,77,500/- வரை ஊதியம்..!

ராணுவத் துறையில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக தற்போது இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் Technical Graduate Course பணிக்கு என 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (09.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Technical Graduate Course
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய இராணுவம் காலிப்பணியிடங்கள்:

இந்திய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் பின்வரும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Civil – 09
 • Architecture – 01
 • Mechanical – 06
 • Electrical / Electrical & Electronics – 03
 • Computer Science & Engineering/ Computer Technology/ M. Sc. Computer Science – 08
 • Information Technology – 03
 • Electronics & Telecommunication – 01
 • Electronics & Communication – 03
 • Electronics – 01
 • Aeronautical / Aerospace – 01
 • Electronics & Instrumentation / Instrumentation – 01
 • Production Engineering – 01
 • Industrial/ Industrial / Manufacturing / Industrial Engg & Mgt – 01
 • Automobile Engineering – 01
Technical Graduate Course கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech, M.Sc, B. Arch டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை படித்தவராக அல்லது இறுதி ஆண்டு படித்து கொண்டு இருப்பவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Technical Graduate Course வயது வரம்பு:

Technical Graduate Course பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது எனவும் அதிகபட்சம் 27 வயது எனவும் இந்திய இராணுவத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.01.1996 தேதி முதல் 01.01.2003 தேதி வரை உள்ள நாட்களுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவம் சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பயிற்சியின் போது ரூ.13,940.69/- மாத சம்பளமாகவும், பணி நியமனம் செய்யப்பட்ட பின் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை மாத சம்பளமாகவும் பெறுவார்கள்.

Indian Army தேர்வு செய்யும் விதம்:

Technical Graduate Course பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SSB Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

Indian Army விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Indian Army பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 09.06.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here