இந்திய ராணுவத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – குரூப் ‘சி’ காலிப்பணியிடங்கள்!

0
இந்திய ராணுவத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - குரூப் 'சி' காலிப்பணியிடங்கள்!
இந்திய ராணுவத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - குரூப் 'சி' காலிப்பணியிடங்கள்!
இந்திய ராணுவத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – குரூப் ‘சி’ காலிப்பணியிடங்கள்!

இந்திய ராணுவ குரூப் சி தேர்வுகள் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் குரூப் ‘சி’ யில் 47 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் சி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவ பதவிகளுக்காக பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு இது சூப்பரான வாய்ப்பு. ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் ஊடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்ததால் அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால், வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

பதவியின் பெயர்: ஆர்மி மெடிக்கல் கார்ப்ஸ் ((AMC), சட்டப்பிரிவு கிளார்க் (LDC), வாஷர்மேன், பார்பர், குக்

காலியாக உள்ள பணியிடங்கள்: பார்பர் – 19 பணியிடங்கள், சௌகிதார் – 04 பணியிடங்கள், குக் – 11 பணியிடங்கள், எல் டி சி – 02 பணியிடங்கள் மற்றும் வாஷர் – 11 பணியிடங்கள் ஆகும். மொத்தம் 47 பணியிடங்கள்.

விண்ணப்பதார் தகுதி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் LDC பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலம் தட்டச்சு 35w.p.m அல்லது இந்தி தட்டச்சு 30 w.p.m. வேகத்தில் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர் வயது வரம்பு: 18 முதல் 25 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குரூப் சி தேர்வு( எழுத்து தேர்வு) ஆகும். பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொது விழிப்புணர்வு, பொது ஆங்கிலம் மற்றும் எண்ணியல் திறன் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட 150 புறநிலை வகை கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை தபால் மூலம் விண்ணப்பப் படிவத்தை”கமாண்டன்ட் ஏஎம்சி சென்டர் & காலேஜ் லக்னோ” என்பதற்கு ஆதரவாக தொடர்புடைய ஆவணங்களுடன் ‘தி கமாண்டன்ட், ஏஎம்சி சென்டர் & காலேஜ், லக்னோ (UP) – 226002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 04.02.2022.

இந்த பணிக்கான மேலும் தகவல்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!