இந்திய விமான படையில் அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பு அறிவிப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
இந்திய விமான படையில் அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பு அறிவிப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
இந்திய விமான படையில் அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பு அறிவிப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
இந்திய விமான படையில் அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பு அறிவிப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

இந்திய விமான படையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Agniveervayu Intake 01/2022 என்கிற திட்டத்தின் கீழ் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தற்போது இத்திட்டத்தின் வாயிலாக பல்வேறு காலிப்பணியிடங்கள் இந்திய விமானப்படையில் நிரப்ப தயாராக உள்ளது. எனவே இப்பணி குறித்த முழுமையான விவரங்களை இப்பதிவின் மூலம் தகுதி மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ளவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 05.07.2022 ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும். அதற்குள் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Agniveervayu Intake 01/2022
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Agniveervayu Intake 01/2022 காலிப்பணியிடங்கள்:

இந்த விமானப்படையில் தற்போது Agniveervayu Intake 01/2022 திட்டத்தின் பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Indian Air Force கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அல்லது Engineering Diploma 3 ஆண்டுகள் தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
Agniveervayu Intake 01/2022 வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 23 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் 29.12.1999 முதல் 29.06.2005 ம் தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Indian Air Force ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.30,000/- பெறுவார்கள். கூடுதல் தொகை குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

Agniveervayu Intake 01/2022 உடல் தகுதி விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 152.5Cms உயரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • மார்பகம் 5Cms விரியும் அளவிற்கு இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டும்.
  • Tattoo போட்டிருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
Indian Air Force விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.250/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Agniveervayu Intake 01/2022 தேர்வு செய்யும் முறை:

Phase – I

    1. Online Test

Phase – II

    1. Online Test
    2. Physical Fitness Test (PFT)
    3. Adaptability Test- I.
    4. Adaptability Test- II

Phase – III

    1. Medical Examination
Indian Air Force விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமானப்படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள் மட்டும், இப்பதிவின் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 24.06.2022ம் தேதியில் இருந்து 05.07.2022ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!