19-வது ஆசிய விளையாட்டு போட்டி – டேபிள் டென்னிஸ் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், அதில், பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி:
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் இன்று (செப்.23) முதல் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த போட்டி அக். 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும் வசதி – அதிக லாபம் நிச்சயம்!
இந்நிலையில் ஆசிய விளையாட்டு தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் 3-0 என்ற செட் கணக்கில் நேபாளத்தை இந்தியா வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018-ம் ஆண்டு 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.