Tokyo Olympics: ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லுமா இந்தியா?

0
Tokyo Olympics: ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லுமா இந்தியா?
Tokyo Olympics: ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லுமா இந்தியா?
Tokyo Olympics: ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லுமா இந்தியா?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் தங்க பதக்கத்தை தவறவிட்ட இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை சந்திக்கிறது.

வெண்கல பதக்கம்

ஒலிம்பிக் வரலாற்றில் 49 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி தங்கப் பதக்கத்துக்கான வாய்ப்பை நழுவ விட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னாக நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து இந்திய அணி தங்கம் வெல்வதற்கு வெற்றி வாய்ப்பாக கருதப்பட்ட அரையிறுதி போட்டியில் உலக சாம்பியனான பெல்ஜியம் அணியிடம் தோல்வியுற்றது.

ஆகஸ்ட் 4 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இந்த போட்டியில் 2-5 என்ற செட் கணக்கில் தோல்வியுற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்துக்கான அரிய வாய்ப்பை தவறவிட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 49 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வெல்கிற இந்தியர்களின் கனவு தகர்ந்தது. இதனிடையே மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஜெர்மனி வீரர்களை 3 -1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

TN Job “FB  Group” Join Now

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைக்க உள்ளது. அந்த வகையில் அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனி அணி வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!