IND vs WI T20 தொடர் – ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி! BCCI அறிவிப்பு!

0
IND vs WI T20 தொடர் - ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி! BCCI அறிவிப்பு!
IND vs WI T20 தொடர் - ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி! BCCI அறிவிப்பு!
IND vs WI T20 தொடர் – ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி! BCCI அறிவிப்பு!

வெஸ்ட் இண்டிஸ் இந்தியா இடையிலான ஒரு நாள் மற்றும் T20 போட்டிகள் இம்மாதம் தொடங்க உள்ளது. சமீபத்தில் கொரோனா பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது வெஸ்ட் இண்டிஸ் இந்தியா மோதும் T20 தொடருக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் 75 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

BCCI அறிவிப்பு:

வெஸ்ட் இண்டிஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6,9,11 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் பிப்ரவரி 16,18,20 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு போலார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டிஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகளில் விளையாடி 2 இல் தோல்வியடைந்து தொடரை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்திய அணி இத்தொடருக்கான ரோஹித் தலைமையிலான ஒரு நாள் மற்றும் T20 அணியை அறிவித்தது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – நேரடி வகுப்புகளுக்கு வரவேற்பு! மாணவர்கள் உற்சாகம்!

இதனை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி போலார்ட் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் T20 அணியை வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும் T20 தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசிடம் இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை ஏற்று 3 T20 போட்டிகளுக்கும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 75 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு நேற்று ஜனவரி 31 ஆம் தேதி அறிவித்தது.

தமிழக சமூக நலத்துறையில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிப்ரவரி 6 முதல் அகமதாபாத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய வெஸ்ட் இண்டிஸ் அணிகள் இத்தொடரை முடித்துவிட்டு டி20 போட்டிகளுக்கு கொல்கத்தாவுக்கு வருகின்றனர். அரசு அறிவிப்பின் படி ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 50,000 ரசிகர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவர் அவிஷேக் டால்மியா டி20 தொடரில் கலந்து கொள்ள ரசிகர்களை அனுமதித்த மேற்கு வங்க அரசுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த ஆண்டு நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் மூன்றாவது T20I ஐ கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!