IND vs NZ T20 தொடர் 2021 – நியூஸிலாந்து அணி அறிவிப்பு, கேன் வில்லியம்சன் விலகல்!

0
IND vs NZ T20 தொடர் 2021 - நியூஸிலாந்து அணி அறிவிப்பு, கேன் வில்லியம்சன் விலகல்!
IND vs NZ T20 தொடர் 2021 - நியூஸிலாந்து அணி அறிவிப்பு, கேன் வில்லியம்சன் விலகல்!
IND vs NZ T20 தொடர் 2021 – நியூஸிலாந்து அணி அறிவிப்பு, கேன் வில்லியம்சன் விலகல்!

நாளை டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் போட்டியிலிருந்து விலகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

டி20 தொடர்:

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் டி20 போட்டியானது நவம்பர் 17 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் டெஸ்ட் தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 7ம் தேதி நிறைவு பெறுவதாக கூறப்பட்டுள்ளது. டி20 மற்றும் டெஸ்ட் மேட்ச்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிப்பு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!

ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இந்த அணியில் இடம்பெறவில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார். முன்னணி வீரர்களான கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தற்போது வெளியான அறிவிப்பின் படி டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டிம் செளதி (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், லாகி ஃபெர்குசன், மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஆடம் மில்ன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சைஃபர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி ஆகியோர் விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக டி20 தொடரிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!