விராட் கோஹ்லி தலைமையில் தென் ஆப்ரிக்காவிற்கு பறந்த இந்திய அணி – ரசிகர்கள் உற்சாகம்!

0
விராட் கோஹ்லி தலைமையில் தென் ஆப்ரிக்காவிற்கு பறந்த இந்திய அணி - ரசிகர்கள் உற்சாகம்!
விராட் கோஹ்லி தலைமையில் தென் ஆப்ரிக்காவிற்கு பறந்த இந்திய அணி - ரசிகர்கள் உற்சாகம்!
விராட் கோஹ்லி தலைமையில் தென் ஆப்ரிக்காவிற்கு பறந்த இந்திய அணி – ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்திற்கு விமானத்தில் செல்லும் இந்திய வீரர்களின் புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்:

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சீரிஸ்க்கு விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி மும்பையில் இருந்து புறப்பட்டது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணிமாறுதல் கலந்தாய்வு! அமைச்சர் விளக்கம்!

தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்தியாவின் சிறந்த தொடக்க வீரரான ரோஹித் சர்மா விளையாடவில்லை. இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா தொடை தசை பிடிப்பு காயத்தால் இந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ரோஹித் சர்மாக்கு பதிலாக பிரியங் பஞ்சல் அணியில் இடம் பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா காயத்தை பற்றி பேசிய விராட் கோஹ்லி, ரோஹித்தின் பங்கேற்பை இந்திய அணி மிகவும் தவறுகிறது. கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஓப்பனிங் இறங்குவார்கள் என்றும் அவர்களுக்கு எதுவும் காயம் என்றால் பஞ்சல் பேக்கப் செய்து கொள்வார் எனவும் கூறினார். பிசிசிஐ சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித்தை தேர்வு செய்தது. எனவே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ரோஹித் தென் ஆப்பிரிக்காவுக்கு வருவார் என்று ரசிகர்களிடையே எதிர்பாக்கப்படுகிறது.

18 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்:

விராட் கோஹ்லி (C), மயங்க் அகர்வால், கே.எல் ராகுல், பிரியங் பஞ்சல், முகமது ஷமி, மொஹம்மது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், அஜின்கியா ரஹானே, ஹனுமான் விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்துல் தாகூர், சேடேஸ்வர புஜாரா, ரிஷாப் பண்ட் (wk), விருத்திமான் சாஹா (wk).

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here