ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி – இந்திய அணி அறிவிப்பு! முக்கிய வீரர்கள் இல்லை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் இந்தியா களமிறங்கும் நிலையில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அணியினர் அறிவித்துள்ளனர்.
3 ஒருநாள் போட்டி:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் இந்தியா களமிறங்க இருக்கிறது. அதாவது, அக்.22, 24 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்கள் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அணி விவர வெளியாகியுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதாவது, மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா ஆகியோருக்கு முதல் 2 ஒருநாள் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கே.எல்.ராகுல் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஷ்வினுக்கு ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு அளிக்க பட்டுள்ளது மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – சவரன் ரூ. 44,400க்கு விற்பனை!
மேலும், இந்த அணியில் ஜடேஜா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.