பாரம்பரியம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 வது இடம் – யுனெஸ்கோ அறிவிப்பு!

0
பாரம்பரியம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 வது இடம் - யுனெஸ்கோ அறிவிப்பு!
பாரம்பரியம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 வது இடம் - யுனெஸ்கோ அறிவிப்பு!
பாரம்பரியம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 வது இடம் – யுனெஸ்கோ அறிவிப்பு!

உலகின் அதிக பாரம்பரியம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மேலும் சில இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்தியா பட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளது என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ அறிவிப்பு:

உலகின் மிகவும் தொன்மையான நகரம் என்றது நினைவுக்கு வருவது இந்தியா தான். இதற்கு பல அறிவியல் ஆதாரங்கள் உள்ளது. இந்நிலையில் சீனாவின் புஜோ நகரில் 44 வது உலக பாரம்பரியக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உலக பாரம்பரிய மிக்க நகரங்களின் பட்டியலில் ஆலோசையில் உள்ள இடங்களை பற்றி அதில் விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தியாவில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோயில்கள், வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரை படித்துறை, சத்புரா புலிகள் காப்பகம் உள்ளிட்ட ஆறு இடங்கள் உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

97 ரூபாயில் தினமும் 2 GB டேட்டா – BSNL ன் சூப்பர் திட்டம்!!

தற்போது, அந்த பட்டியலில் தெலுங்கானாவின் ககாதியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் மற்றும் குஜராத்தை சேர்ந்த தோலவிரா ஆகிய இடங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்து அங்கீகரித்துள்ளனர். இதனால் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இந்தியாவின் 40 இடங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், உலக பாரம்பரிய சின்னங்களில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் 12.71 சதவிகிதமும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் 47.08 சதவிகிதமும், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் 24.11 சதவிகிதமும், அரபு நாடுகளில் 7.66 சதவிகிதமும், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 8.44 சதவிகித பகுதிகளும் உலக பாரம்பரிய இடங்களில் இடம் பிடித்துள்ளன.

TN Job “FB  Group” Join Now

இதன் முடிவில் உலகிலேயே அதிக பாரம்பரிய இடங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. அபிக்கு மொத்தம் 57 பாரம்பரிய இடங்கள் உள்ளது. அடுத்ததாக 56 பாரம்பரிய இடங்கள் உள்ள சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 51 பாரம்பரிய இடங்களை கொண்ட ஜெர்மன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் இந்தியா மொத்தம் 40 பாரம்பரிய இடங்களுடன் 6 வது இடத்தில் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!