அஞ்சல் துறையில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
அஞ்சல் துறையில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை - 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
அஞ்சல் துறையில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை - 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
அஞ்சல் துறையில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Postal Assistant, Sorting Assistant, Mail Guard போன்ற பல்வேறு பணிகளுக்கு என இந்திய அஞ்சல் துறையில் (India Post) விளையாட்டு வீரர்களுக்கான பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.81,100/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய அஞ்சல் துறை:

இந்திய அஞ்சல் துறையில் (India Post) இருந்து 08.11.2023 அன்று வெளியான அறிவிப்பில் Postal Assistant, Sorting Assistant, Postman, Mail Guard, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1899 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே 361 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

இந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு Merit List என்னும் தேர்வு முறையின் படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தனது பணிக்காலம் முழுவதும் ரூ.18,000/- முதல் ரூ.81,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

TNPSC AE தேர்வில் வெற்றி உங்கள் கையில் – தயாராவது எப்படி!

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 09.12.2023 அன்று வரை மட்டுமே இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் Women / SC / ST / PWBD / EWS விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

Download Notification Link
Online Application Link
TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!