இந்திய அஞ்சல் துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
இந்திய அஞ்சல் துறையில் வேலை - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய அஞ்சல் துறையில் வேலை - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய அஞ்சல் துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Staff Car Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் India Post Office – MMS
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

India Post Office – MMS பணியிடங்கள்:

இந்திய அஞ்சல் துறை தற்போது Staff Car Driver பதவிக்கு 24 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Staff Car Driver Recruitment கல்வி தகுதிகள்:
  • இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

India Post Office – MMS முன் அனுபவம்:
  • இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • இத்துடன் விண்ணப்பதாரர்கள் Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி, அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Staff Car Driver Recruitment வயது வரம்பு:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

India Post Office – MMS ஊதியம்:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay matrix Level-02 as per 7th CPC என்கிற ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.19,900/- மாத ஊதியம் அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு வழக்கங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Staff Car Driver Recruitment தேர்வு முறை:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் Absorption / Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

India Post Office – MMS விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு 20.07.2022 ம் தேதி மாலை 5 மணிக்குள் வரும்படி பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

Staff Car Driver Recruitment Notification & Application PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!