இந்திய அஞ்சல் துறையில் GDS பணியிடத்திற்கான தேர்வு பட்டியல் வெளியீடு – முழு விவரம் உள்ளே!

0
இந்திய அஞ்சல் துறையில் GDS பணியிடத்திற்கான தேர்வு பட்டியல் வெளியீடு - முழு விவரம் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் GDS பணியிடத்திற்கான தேர்வு பட்டியல் வெளியீடு - முழு விவரம் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் GDS பணியிடத்திற்கான தேர்வு பட்டியல் வெளியீடு – முழு விவரம் உள்ளே!

இந்திய அஞ்சல் துறை ஆனது கிராமின் டக் சேவாக் (GDS) பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. தற்போது இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு பட்டியல்

இந்திய அஞ்சல் துறையில் கிராமின் டக் சேவாக் பணியிடத்தில் காலியாக இருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய அஞ்சல் துறை அறிவித்திருந்தது.

நாட்டில் அதிகரித்து காய்ச்சலால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளா? வெளியான ஷாக்கிங் நியூஸ்!

மேலும் இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இதற்கான தேர்வு முடிவுகளை indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் அனைத்து வட்டங்களுக்குரிய தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட தேர்வு பட்டியலைப் பதிவிறக்கம் செய்து தங்களின் பதிவு எண்கள் இருக்கிறதா? என சரிபார்த்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!