ICC T20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
2022 ஆண்டுக்கான ICC 20 ஓவர் ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி கடந்த ஆண்டை போல் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.
ICC T20 உலகக் கோப்பை:
இந்த ஆண்டுக்கான ICC 20 ஓவர் ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி முடிவடைகிறது. முதல் சுற்று போட்டியில் இலங்கை, நமிபியா அணிகள் அக்டோபர் 16 ஆம் தேதி மோதுகின்றன. கடந்த ஆண்டை போல இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தொடரை இந்திய அணி மொத்தம் 5 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 மைதானங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாட உள்ளது. இதில் 12 அணிகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள 4 அணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ICC தெரிவித்துள்ளது. இந்த 16 அணிகளும் குரூப்-1 மற்றும் குரூப்-2 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – குவியும் புகார்கள்! முதல்வர் இன்று ஆலோசனை!
இம்முறை T20 உலகக் கோப்பை போட்டிகள் சூப்பர் 12 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதில் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து இடம்பெற்றுள்ள நிலையில் ஏ குரூப்பில் முதலிடம் பெறும் அணி பி குரூப்பில் 2-வது இடம் பெறும் அணி தகுதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் இடம்பெற்றுள்ள நிலையில் பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும் ஏ பிரிவில் 2-வது இடம் பெறும் அணியும் சேர்க்கப்படவுள்ளது.
இந்திய அணி மோதும் போட்டிகள்:
- அக்டோபர் 23 – இந்தியா VS பாகிஸ்தான்
- அக்டோபர் 27 – இந்தியா VS குரூப் A ரன்னர்
- அக்டோபர் 30 – இந்தியா VS தென்னாபிரிக்கா
- நவம்பர் 6 – இந்தியா VS பங்களாதேஷ்
- நவம்பர் 2 – இந்தியா VS குரூப் B வின்னர்
Velaivaippu Seithigal 2021
To Download=> Mobile APP Download செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்