இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமனம் – முழு விவரம் இதோ!

0

இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமனம் – முழு விவரம் இதோ!

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய தளபதி

இந்திய கடற்படை துணைத் தளபதியாக இப்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 முதல் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள்ளது. இப்போது கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஏப்ரல் 30 2024 முதல் ஓய்வு பெறுகிறார். அதனால் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சவரனுக்கு ரூ.40 குறைந்தும் 55 ஆயிரத்தை தாண்டி விற்கும் தங்கம் விலை – அதிர்ச்சியில் மக்கள்!

மேலும் புதிய தளபதி 1964 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பிறந்தவர். இவர் 1985 ஜூலை 1 அன்று இந்திய கடற்படையின் நிர்வாக பிரிவில் நியமிக்கப்பட்டார். மேலும் கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றி உள்ளார். இவர் துணை தளபதியாக இருப்பதற்கு முன் மேற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் ஆக பணியாற்றினார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!