நாடு தழுவிய முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு – ராகுல் காந்தி பேச்சு!!

1
நாடு தழுவிய முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு - ராகுல் காந்தி பேச்சு!!
நாடு தழுவிய முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு - ராகுல் காந்தி பேச்சு!!
நாடு தழுவிய முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு – ராகுல் காந்தி பேச்சு!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்துவதே ஒரே தீர்வு என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டை போல இல்லாமல் இரண்டாம் அலையில் சற்று வீரியமாக உள்ளது. பல லட்சம் பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கையும் தினசரி 3400க்கு மேல் பதிவாகி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக தொற்று எண்ணிக்கை உள்ள ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த 14 நாட்கள் கட்டாயம் முழு ஊரடங்கு அமல்படுத்தி பரவல் சங்கிலியை அவிழ்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கல்வி கட்டணம் குறைப்பு – நீதிமன்றம் உத்தரவு!!

இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறுகையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமே ஒரே தீர்வு எனவும், அதனால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச வருமான திட்டத்தை அறிவித்து ஊரடங்கு அமல்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். இது போல துரித நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காத காரணத்தினால் மட்டுமே பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. First tell what is to be done for food and other necessary things for the poor people until lift of lockdown.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!